"கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா" பாடல்…எஸ்.ஜே சூர்யா சொன்ன விளக்கம்

சென்னை,
குஷி படத்தில் இடம்பெறும் “கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா” பாடல், செந்தமிழ் தேன்மொழியால் பாடலின் கருவில் இருந்து உருவானதாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற குஷி ரீ ரிலிஸ் நிகழ்வில் பேசிய அவர், குஷி திரைப்படம் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாவது தனக்கு மகிழ்ச்சி என்றும், அப்படத்தின் பாடல்கள் தனித்துவமானவை என்றும் தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனரும், நடிகருமானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது கில்லர் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.