‘கட்டாளன்’ படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன்|’Kattalan’ unit welcomes Rajisha Vijayan on board

சென்னை,
‘மார்கோ’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்பு, தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது ‘கட்டாளன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பால் ஜார்ஜ் இயக்கும் இப்படத்திற்கு, ‘காந்தாரா’ படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இசையமைக்கிறார்.
பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இப்படத்தில் சமீபத்தில் சுனில், கபீர் துஹான் சிங் இணைந்தநிலையில், தற்போது கதாநாயகியாக நடிகை ரஜிஷா விஜயன் இணைந்திருக்கிறார்.