கடந்த 10 ஆண்டுகளில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட திரை பிரபலம்

கடந்த 10 ஆண்டுகளில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட திரை பிரபலம்


மும்பை,

இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள். அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.

இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *