ஓ.டி.டி. உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி – நடிகை ரேவதி | I am happy to step into the OTT world

சென்னை,
தமிழ் திரை உலகில் பிரபல நடிகையான ரேவதி, தற்போது ஜியோ ஹாட் ஸ்டார் வெளியிட இருக்கும் ‘குட்ஒய்ப்’ என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் பிரியாமணி, சம்பத்ராஜ் உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
இதுபற்றி நடிகை ரேவதி கூறுகையில், ‘இந்தி ரீமேக்கில் ‘குட் ஒய்ப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார்.
இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓ.டி.டி. உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்’ என்று கூறினார்.
சமீபத்தில் இந்த வெப் தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.