ஓடிடி வெளியீட்டை தவிர்த்த அமீர் கான் படம்…யூடியூபில் வெளியிட முடிவு?|Aamir Khan’s Sitaare Zameen Par To Skip OTT Release?

மும்பை,
‘சித்தாரே ஜமீன் பர்’ படம் ஓடிடியில் வெளியாவதை தவிர்க்க நடிகரும், தயாரிப்பாளருமான அமீர் கான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை 8 வாரங்களுக்குப் பிறகு யூடியூபில் பணம் செலுத்தி பார்க்கும் வகையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், அவருடன் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அமீர் கானின் கடைசி இரண்டு படங்களான ‘லால் சிங் சத்தா’ மற்றும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகியவை பெரும் ஏமாற்றங்களை அளித்தன. இதனால் அனைவரின் கண்களும் ‘சீத்தாரே ஜமீன் பர்’ மீது உள்ளது. இப்படம் அமீர்கானின் கம்பேக் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.