ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீலீலாவின் ஜூனியர்…எங்கு, எப்போது தெரியுமா?

சென்னை,
ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் கிரீத்தி ரெட்டி மற்றும் ஸ்ரீலீலா நடித்த ஜூனியர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 22-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த படத்தில் ஜெனிலியா, ராவ் ரமேஷ், ரவிச்சந்திரன், சுதா ராணி, சத்யா மற்றும் ஹர்ஷா செமுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்,
படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறவில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற வைரல் வாயாரி பாடல் கவனம் பெற்றது.