''ஓஜி'': நேஹா ஷெட்டியின் சிறப்புப் பாடல் வெளியாகாதது ஏன்?

சென்னை,
பவன் கல்யாண் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் ‘தே கால் ஹிம் ஓஜி’. சுஜீத் இயக்கி உள்ள இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ”டிஜே தில்லு” பட நடிகை நேஹா ஷெட்டி ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் பாடல் வெளியாகவில்லை.
இதனால் முன்பு கூறப்பட்டது வதந்தியா? அல்லது தயாரிப்பாளர்கள் அதை ஓஜி 2-க்காக வைத்திருக்கிறார்களா? அல்லது ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. விரைவில் அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கப்படலாம்.
இந்தப் படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்த்ரங்களில் நடிக்கின்றனர். டிவிவி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.