ஒவ்வொரு நாளும் வலியுடன் வேலை செய்கிறேன் – சல்மான்கான் வேதனை

ஒவ்வொரு நாளும் வலியுடன் வேலை செய்கிறேன் – சல்மான்கான் வேதனை


மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் சமீபத்தில் நடந்த ‘தி கிரேட் இந்தியன்’ என்ற பிரபல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சல்மான்கான் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து அவர் நிகழ்ச்சியில் பேசுயுள்ளார். அதாவது, “எனக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்த போதும் நான் 59 வயதிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்பவர் என்னை பிரிய முடிவெடுத்து என்னுடைய பாதி பணத்தை எடுக்க முடிவு செய்தால் மீண்டும் முதலில் இருந்து தாடங்குவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை.

நான் ஒவ்வொரு நாளும் வலியிலும் வேலை செய்கிறேன். முகத்தில் உண்டாகும் ஒரு வகை நரம்பு வலியான டிரைஜீமினல் நியூரால்ஜியா ரத்த நாளங்களில் வீக்கம், தமனி குறைபாடு போன்றவற்றால் நான் பாதிக்கப்பட்டிருந்தாலும் நான் செயல்படுவதை நிறுத்தவில்லை” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *