ஒரே நாளில் ரச்சிதா ராமின் 2 படங்கள் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்|RachitaRam s Cult and Landlord Movie Releasing on Same Day

சென்னை,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்ட்’ (Cult) மற்றும் ’லேண்ட் லார்டு’(Landlord) ஆகிய இரண்டு படங்களும் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் உருவாகியுள்ளது.
‘கல்ட்’ படம் காதல்–திரில்லர் ஜானரில் உருவாகி உள்ள நிலையில், ‘லேண்ட் லார்டு’ படம் ஆக்சன் மற்றும் சமூக அம்சங்களைக் கொண்ட கதையுடன் தயாராகியுள்ளது. இரண்டு படங்களிலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரச்சிதா ராம் நடித்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவது ரச்சிதாவின் கெரியரில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவதுடன், எந்த படம் அதிக வரவேற்பைப் பெறும் என்ற விவாதமும் தீவிரமாக நடந்து வருகிறது.
இரண்டு படங்களின் டிரெய்லர்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரச்சிதா ராம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.






