ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மார்கோ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

பிரபல மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு கேக் செய்யப்பட்டதாக அவர் தனது முகநூல் பக்கம் மூலமாக தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனையை சரி செய்ய தனது குழுவினர் முயற்சி செய்து வருவதாகவும் அதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் செய்திகளை யாகும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்பட்டது என்று ஒரு தகவலை அப்டேட் செய்துள்ளார் உன்னி முகுந்தன் மேலும் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதும் அல்லது லிங்க்குகளை கிளிக் செய்வதும் அவை உங்களது அக்கவுண்டை ஹேக் செய்ய வழிவகுத்து விடும் அபாயம் இருக்கிறது என்கிற எச்சரிக்கையை மீண்டும் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார் உன்னி முகுந்தன்.

கடந்த சில மாதங்களாக நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *