ஒரே சைகையில் ரசிகர்களை கட்டுப்படுத்திய அஜித்குமார்.. என்ன நடந்தது?

நடிகர் என்பதை தாண்டி, கார் பந்தய வீரராகவும் திகழும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.
அஜித்குமார் தற்போது ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியதது. அதனை தொடர்ந்து, அடுத்த போட்டிக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, ரசிகர்களை பார்த்து அஜித்குமார் கையசைத்த போது அவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். உடனே, அப்படி செய்யாதீர்கள் என அஜித்குமார் சைகை மூலம் ரசிகர்களை கட்டுப்படுத்தினார்.