ஒரே இரவில் இரு விருதுகள்”- மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து | “Two awards in one night

ஐதராபாத்,
‘பட்டம் போலே’ என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, தமிழில் ‘சர்தார் 2’, தெலுங்கில் ‘தி ராஜா சாப்’,. மலையாளத்தில் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவருக்கு, “ஹாட்ஸ்டெப்பர் ஆப் த இயர்’ மற்றும் ‘ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் த இயர்’ என்ற இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், ‘இந்த விருதுகளும் சூடாகவே இருக்கிறது’ என்று பெருமைபட சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விருது வென்ற மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.