ஒரு காலத்தில் சாலையில் பேனா விற்றவர்…இப்போது மாத வருமானம் 24 லட்சம்

சென்னை,
தற்போது திரையுலகில் நட்சத்திரங்களாக வலம் வரும் பல நட்சத்திரங்கள் பல கஷ்டங்களையும் சிரமங்களையும் சந்தித்திருக்கிறார்கள். இந்த பிரபல நடிகரும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.
ஒரு காலத்தில் சாலையில் 2 ரூபாய்க்கு பேனாக்களை விற்றார். ஆனால் அவரது கடின உழைப்பால், இப்போது அவர் மாதம் ரூ.24 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார்.
இவர் நடிகராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்பைக்குச் சென்றார். அங்கு யாரையும் தெரியாததால், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் தூங்கினார். அப்போதுதான் அவர் பிழைப்புக்காக பேனா விற்பது, நாடகங்களில் சிறிய வேடங்களில் நடிப்பது போன்ற செயல்களைச் செய்தார்.
இந்த சமயத்தில்தான் அவருக்கு ஒரு வணிக விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மிகவும் பிரபலமானதால், இந்த நடிகரின் பெயர் பிரபலமானது. அதன் பிறகு. அவருக்கு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அந்த நடிகர் மாதத்திற்கு ரூ.24 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். அவர் பெயர் யோகேஷ் திரிபாதி.
நம் தமிழ் ரசிகர்களுக்கு யோகேஷ் திரிபாதி பற்றி அதிகம் தெரியாது, ஆனால் இந்தி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பெயர் மிகவும் பரிச்சயமானது.