ஒருநாள் போட்டியில் 390 ரன் இலக்கை சேஸ் செய்த அணி! கேப்டன் மட்டும் 197 ரன் விளாசியும் வீண்

ஒருநாள் போட்டியில் 390 ரன் இலக்கை சேஸ் செய்த அணி! கேப்டன் மட்டும் 197 ரன் விளாசியும் வீண்


மகளிர் சீனியர் ஒருநாள் தொடர் போட்டியில் பெங்கால் மகளிர் அணி 390 ஓட்டங்கள் இலக்கை எட்டி வரலாறு படைத்தது. 

ஷஃபாலி வெர்மா ருத்ரதாண்டவம்


சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் சீனியர் ஒருநாள் தொடரின் காலிறுதியில் ஹரியானா மற்றும் பெங்கால் அணிகள் மோதின.


ரீமா சிசோடியா 58 ஓட்டங்களில் வெளியேற, தீயா யாதவ் 7 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆனால் அணித்தலைவர் ஷஃபாலி வெர்மா ருத்ரதாண்டவம் ஆடினார்.



115 பந்துகளை எதிர்கொண்ட ஷஃபாலி வெர்மா (Shafali Verma) 11 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகளுடன் 197 ஓட்டங்கள் விளாசினார். 



சோனியா மெந்தியா 41 பந்துகளில் 61 ஓட்டங்களும், திரிவேனி வஸிஸ்தா 46 ஓட்டங்களும் எடுக்க, ஹரியானா மகளிர் அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 389 ஓட்டங்கள் குவித்தது. 

390 ரன் சேஸ்



அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் மகளிர் அணியில் தாரா, சஸ்தி கூட்டணி 100 ஓட்டங்கள் குவித்தது.

சஸ்தி 52 (29) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த தாரா 49 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்தார். 



பின்னர் மிதா 12 ஓட்டங்களில் வெளியேற சதம் விளாசிய தனுஸ்ரீ சர்கார் (Tanusree Sarkar) 83 பந்துகளில் 113 ஓட்டங்களும் விளாசினார்.


எனினும் பிரியங்கா பாலா (Priyanka Bala) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 பந்துகளில் 88 ஓட்டங்கள் எடுக்க, பெங்கால் மகளிர் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை எட்டிய அணி எனும் சரித்திரத்தை பெங்கால் மகளிர் அணி படைத்தது.



இதற்கு முன்பு 2019யில் நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 309 ஓட்டங்களை இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.  

bengal women chase 390 target in odi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *