“ஒஜி” படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா மோகன்

“ஒஜி” படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா மோகன்


பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது.

பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 3 நாட்களில் ஓஜி படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓஜி படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், “மிகவும் அர்த்தமுள்ள நினைவுகளின் சிறிய விஷயங்கள் எங்கள் படத்தின் மீது இவ்வளவு அன்பை பொழிந்ததற்கு அனைவருக்கும் நன்றி எங்கள் இதயங்கள் நன்றியால் நிரம்பி வழிகின்றன உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் எங்கள் ‘ஓஜி’ படத்தை காணுங்கள்” என்று பிரியங்கா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

பிரியங்கா மோகன் 2021ல் வெளிவந்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் அதன்பின் எதற்கும் துணிந்தவன், டான், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் கேங் வீடர் படத்தில் நானியின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் ஸ்ரீகாரம், சரிபோத சனிவாரம் ஆகிய படங்களில் நடித்தார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *