ஐஸ்வர்யா ராய் படம்…பல நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன மம்முட்டி

சென்னை,
பல முன்னணி நடிகர்கள் நிராகரித்த பிறகு, ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மம்முட்டி ஒப்புக்கொண்டதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. 2000-ம் ஆண்டில் மே 5-ம் தேதி இப்படம் வெளியானது. மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இதில், மம்முட்டி ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக, சண்டையில் ஒரு காலை இழந்த மேஜர் பாலாவாக நடித்திருந்தார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் இயக்குனர் ராஜீவ் மேனன், மேஜர் பாலாவின் கதாபாத்திரத்திற்கு நடிகரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான இருந்ததாக கூறினார். ஒரு காலைக் கொண்டவராக நடிக்க விரும்பவில்லை என்று கூறி சில நட்சத்திர நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தை நிராகரித்ததாக தெரிவித்தார்.