ஐரோப்பாவிற்கு புறப்பட்ட ’தி ராஜா சாப்’ குழு….இதுதான் காரணமா? |The Raja Saab Team Jets Off to Europe for This Reason

ஐரோப்பாவிற்கு புறப்பட்ட ’தி ராஜா சாப்’ குழு….இதுதான் காரணமா? |The Raja Saab Team Jets Off to Europe for This Reason


சென்னை,

அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கிய இந்த பான்-இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரபாஸ் நடிக்கும் இந்த பெரிய பட்ஜெட் ஹாரர் படம் அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படக்குழு ஐரோப்பாவுக்கு புறப்பட்டுள்ளது. இரண்டு பாடல்கள் அங்கு படமாக்கப்படும் என்றும், அத்துடன் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், சத்யா மற்றும் வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *