ஏக்தா கபூர் தயாரிக்கும் திரில்லர் படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.|Shraddha Kapoor opts out of Ektaa Kapoor’s next thriller film due to fees clash

ஏக்தா கபூர் தயாரிக்கும் திரில்லர் படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.|Shraddha Kapoor opts out of Ektaa Kapoor’s next thriller film due to fees clash


சென்னை,

கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படம் ஷ்ரத்த கபூருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் , ஏக்தா கபூர் தயாரிக்கும் திரில்லர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஹி அனில் பார்வே இயக்கிய விருக்கும் இப்படத்தின் விதிமுறைகள் தொடர்பாக நடிகை ஷ்ரத்தா கபூருக்கும் தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நடிகை ஷ்ரத்தா ரூ.17 கோடி சம்பளம் கேட்டதாகவும், ஒரு பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு இது லாபகரமானதாக இருக்காது என்று தயாரிப்பாளர்கள் கூரியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் விளைவாக ஷ்ரத்தா இந்த படத்திலிருந்து விலகி இருக்கிறார்.

இதனையடுத்து, புதிய கதாநாயகியை தயாரிப்பாளர்கள் தேடி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *