ஏகனுக்கு ஜோடியான கோர்ட் பட நடிகை…பர்ஸ்ட் லுக் வெளியீடு|Actor Aegan teams up with director Yuvaraj Chinnasamy, Court fame Sridevi Apalla

சென்னை,
நடிகர் ஏகன் தனது அடுத்த படத்திற்காக ஜோ மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இது விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படமாகும். இப்படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். இப்படத்தில் ஏகனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு ’ஹைக்கூ’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.






