‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படக்குழுவுடன் ‘ஹோலி’ கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

சென்னை,
2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. பின்னர் பாலிவுட் நடிகையாக உயர்ந்த இவர், தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரிகிறார்.
இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ‘எஸ்.எஸ்.எம்.பி 29’படக்குழுவுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் நடந்துவருகிறது. 2019-ம் ஆண்டு வெளியான ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ படத்திற்குப் பிறகு பிரியங்கா நடிக்கும் இந்திய திரைப்படம் இதுவாகும்.






