’எஸ்.எஸ்.எம்.பி 29’ – இணையத்தில் வைரலாகும் மகேஷ் பாபுவின் புதிய புகைப்படம் |Mahesh Babu flaunts curly long hair look for SSMB 29 in new pics, fans react

சென்னை,
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவின் புதிய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
தாடியும் சுருண்ட தலை முடியுடனும் இருக்கும் மகேஷ் பாபு, நண்பருடன் ஆழ்ந்த உரையாடலில் மூழ்கியிருப்பதை அதில் காண முடிகிறது. இதனை கண்ட மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரை ‘சிங்கம்’ என்றும் ‘ஹாலிவுட் ஹீரோ’ என்றும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.






