எல் 2 எம்புரான்” – மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு | “L2 Emburaan

எல் 2 எம்புரான்” – மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு | “L2 Emburaan


சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் வெளியிட ‘எல் 2 எம்புரான்’ படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மஞ்சு வாரியர் இப்படத்தில் ‘பிரியதர்ஷினி ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதேபோல, படத்தின் முக்கிய கதாபாத்திரமான மோகன்லாலின் அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மோகன்லால் இப்படத்தில் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *