எல்லோரை போலவும், நானும் அந்த விஷயத்தை அதிகம் செய்கிறேன்- சுருதிஹாசன் | Like everyone else, I do that thing a lot

சென்னை,
கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான சுருதிஹாசன், தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘எல்லோர் போலவும், நானும் செல்போனை ரொம்ப ரொம்ப அதிகமாகவே பயன்படுத்துகிறேன். நிறைய வேலைகளுடன் செல்போன் தொடர்பில் இருப்பதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. சில நேரம் செல்போன்களில் சிக்னல் இல்லாமல் போகும்போது வெறுப்பாக இருக்கிறது. சில வேளைகளில் அதுவே மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.