‘‘எல்லா பிறவிகளிலும் நடிகராகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’ கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

‘‘எல்லா பிறவிகளிலும் நடிகராகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’ கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு


சென்னை,

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.

இந்த விருதை வாங்கிய ரஜினிகாந்த் விழாவில் பேசும்போது, ‘‘எனக்கு விருது வழங்கி கவுரவம் செய்த மத்திய அரசுக்கும் கோவா மாநில அரசுக்கும் நன்றி. இப்போதுதான் சினிமாவில் வந்தது போல இருக்கிறது அதற்குள் 50 ஆண்டுகள் கடந்து விட்டது. சினிமாவையும், நடிப்பையும் என்றுமே விரும்புகிறேன். இன்னும் நூறு பிறவிகள் எடுத்தால் கூட நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்”, என்று குறிப்பிட்டார்.இந்த விழாவில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *