''எப்போதும் எனது ஸ்கிரிப்டை முதலில் அந்த நடிகரிடம்தான் கூறுவேன்'' – ''சூர்யா 46'' பட இயக்குனர்

சென்னை,
தோலி பிரேமா, வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களால் பார்வையாளர்களைக் கவர்ந்த வெங்கி அட்லூரி, இப்போது ஒரு புதிய படத்திற்காக சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.
”சூர்யா 46” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்தப் படம், மனதைத் தொடும் குடும்ப பொழுதுபோக்கு படம் என்றும், தற்போது அதன் படப்பிடிப்பு நடுப்பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கி அட்லூரி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அவர் எப்போதும் தனது ஸ்கிரிப்ட்களை முதலில் நாக சைதன்யாவிடம்தான் கூறுவதாக தெரிவித்தார்.
இருந்தபோதிலும், இதுவரை இருவரும் ஏன் இணையவில்லை என்று கேட்டபோது, கால்ஷீட் பிரச்சினை மற்றும் பிற நடைமுறை சிக்கல்கள் தடையாக இருந்ததாகக் கூறினார்.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா தண்டு இயக்கும் ”என்.சி 24” படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.