‘எப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்பதே மிகப்பெரிய பொய் – நடிகை அனுபமா கருத்து, ‘I love you forever’ is the biggest lie

‘எப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்பதே மிகப்பெரிய பொய் – நடிகை அனுபமா கருத்து, ‘I love you forever’ is the biggest lie


சென்னை,

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் காதல் குறித்து கருத்து தெரிவித்த அனுபமா பரமேஸ்வரன் ‘எப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்பதே மிகப்பெரிய பொய் என்று தெரிவித்துள்ளார்.

காதல் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, “எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் வார்த்தை இந்த உலகத்தின் மிகப்பெரிய பொய். இது ஒருபோதும் நடக்காத ஒன்று.

எனது உயிரே நீதான், நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்லக்கூடிய நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் தயவும் செய்து உடனே அதை விட்டு ஓடி விடுங்கள் என்பதை எனது அறிவுரையாக சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார். காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் எதற்காக இப்படி கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *