என் வயதில் பாதி உள்ள பசங்கதான் கல்யாணம் பண்ண விரும்புறாங்க..அமிஷா படேல்

என் வயதில் பாதி உள்ள பசங்கதான் கல்யாணம் பண்ண விரும்புறாங்க..அமிஷா படேல்


சென்னை,

விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“திருமணம் செய்து கொண்டால் சினிமாவை விட்டுவிட்டு வீட்டில் அமர்ந்து சப்பாத்தி சுடனும்னு பலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு பசங்க. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண முன்மொழிவு வருகிறது. என் தொழில் வாழ்க்கைக் காக நான் நிறைய இழந்து விட்டேன். காதலுக்காவும் நிறைய விட்டுவிட்டேன். இரண்டிலும் ரொம்ப கற்றுக் கொண்டேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு ஒரு தீவிர உறவு இருந்தது. அவர் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் துறை குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் நான் சினிமாவில் நுழைய முடிவு செய்த போது சூழ்நிலை சரியில்லா மல்போக காதலை விட தொழிலை தேர்ந்தெடுத்தேன்.

தகுதியான ஒருவரை கண்டுபிடிக்கும் வரை திருமணத்திற்கு காத்திருக்கிறேன். என் வயதில் பாதி பேர் டேட்டிங் அழைத்து செல்ல விரும்புகிறார்கள். ஒரு ஆண் மனரீதியாக முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *