என் படத்தில் கிளாமர் இருக்கும்.. ஆனால் அது இருக்காது – சுந்தர் சி | There will be glamour in my film.. but it won’t be there

என் படத்தில் கிளாமர் இருக்கும்.. ஆனால் அது இருக்காது – சுந்தர் சி | There will be glamour in my film.. but it won’t be there


சென்னை,

நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இதற்கு சத்யா. சி இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி “என்னுடைய படத்தினை பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் தான் பார்க்கின்றனர். அதனால் தான் என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை நான் விரும்புவது இல்லை. என்னுடைய படத்தில் கிளாமர் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆபாசம் இருக்காது. நான் கதை எழுதும் போதே இதை தவிர்த்துவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *