‘என் தந்தையின் கடைசி நாட்களில் கூட என்னால் அவர் பக்கத்தில் இருக்க முடியவில்லை’ – பிரியங்கா சோப்ரா |’I couldn’t be by my father’s side even in his last days’

‘என் தந்தையின் கடைசி நாட்களில் கூட என்னால் அவர் பக்கத்தில் இருக்க முடியவில்லை’ – பிரியங்கா சோப்ரா |’I couldn’t be by my father’s side even in his last days’


சென்னை,

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது தொழில் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தியாகங்கள் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். இந்த நிலையை அடைய தான் எவ்வளவு கடினமாக உழைத்தேன், எதை இழந்தேன் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ‘எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், எந்த மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கொண்டேன். நான் எவ்வளவு கடினமாக உழைத்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

இந்தப் பயணத்தில், எனது பிறந்தநாளையும் பண்டிகைகளையும் கூட கொண்டாட முடியவில்லை, எனது குடும்பத்தினருடன் மிகக் குறைவான நேரங்களையே கழித்தேன். என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோதும், அவரது கடைசி நாட்களில் அவருக்கு அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லை,” என்றார். தற்போது, பிரியங்காவின் இந்த வார்த்தைகள் வைரலாகி வருகின்றன.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தில் ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தெலுங்கு கற்றுக்கொள்வதாகவும், தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேசப்போவதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *