என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா ; ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை
தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
“சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட திரைப்பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு. எவ்வளவோ இழப்புகளை சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை. ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம்.
என்றார்.