என் கணவர் ராசியானவர்.. அதனால்தான் விஜய் ஆண்டனி இப்போது..”- ஷோபா சந்திரசேகர் | “My husband is a zodiac sign.. that’s why Vijay Antony is now..

என் கணவர் ராசியானவர்.. அதனால்தான் விஜய் ஆண்டனி இப்போது..”- ஷோபா சந்திரசேகர் | “My husband is a zodiac sign.. that’s why Vijay Antony is now..


சென்னை,

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25-வது படமாக உருவாகியுள்ள படம் சக்தித் திருமகன். படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி, வாகை சந்திர சேகர், சுனில் கிருபவானி, செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 19-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி படத்தின் பிரீ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், என் கணவர் ரொம்ப ராசியானவர். அவரை முதலில் என் கணவர் தான் சுக்ரன் படத்தில் நடிக்க வைத்தார். அப்போது அவர் வேறு ஒரு பெயர் வைத்திருந்தார்.

என் கணவர் அதை மாற்றி அவருக்கு விஜய் ஆண்டனி என்று வைத்தார். என் கணவர் ரொம்ப ராசியானவர் அதனால் தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். 25 படத்தில் நடித்து விட்டார். விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் கதை வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *