“என் அப்பா என் ஹீரோ”… நடிகர் தனுஷின் தந்தையர் தின பதிவு!

சென்னை,
உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்காக நீங்கள் செய்த தியாகங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் அப்பா என் ஹீரோ.. தந்தையர் தின வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.