“என்னை ஏமாத்திட்டாரு”… என் குழந்தையின் சாபம் சும்மா விடாது – ஜாய் கிரிஸில்டா | “You tricked me”… My child’s curse will not go away

“என்னை ஏமாத்திட்டாரு”… என் குழந்தையின் சாபம் சும்மா விடாது – ஜாய் கிரிஸில்டா | “You tricked me”… My child’s curse will not go away


சென்னை,

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய குழந்தை தனது வயிற்றில் இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்த புகார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்காக இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின்னர் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

“கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழுமையான பதில் அளித்துள்ளேன். பாசிட்டிவான ரிப்ளை அளித்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என பலரும் கூறுகிறீர்கள். அது தவறு. உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் என்னை திருமணம் செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். என்னை பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.

என் குழந்தையின் சாபம் சும்மா விடாது. என் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *