என்னுடைய கெரியரில் பேரழிவை உண்டாக்கிய படம் அது – மனிஷா கொய்ராலா| That was the film that caused a disaster in my career

என்னுடைய கெரியரில் பேரழிவை உண்டாக்கிய படம் அது – மனிஷா கொய்ராலா| That was the film that caused a disaster in my career


சென்னை,

பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக மனிஷா கொய்ராலா இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘ஆளவந்தான்’, ‘பாபா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், ”நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வந்தேன். அங்கு எனக்கு ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது. ‘பாபா’ படத்தில் நடித்த பிறகு, எனக்கு சினிமா வாய்ப்புகள் குறையும் என்று நான் கணித்தேன். பின்னாளில் அதுதான் நடந்தது. தென்னிந்திய சினிமாவில் என்னுடைய திரை வாழ்க்கைக்கு பேரழிவை உண்டாக்கிய படம் அது” என்று கூறியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹீரமாண்டி’ என்ற பாலிவுட் வெப் தொடர், மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *