'என்னால் காத்திருக்க முடியாது' விஜய் தேவரகொண்டா படத்துக்காக ஏங்கிய ராஷ்மிகா

சென்னை,
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக வரும் செய்திகள் அதிகரித்து வருகிறது. இருவரும் வெளிப்படையாக தங்களது காதல் விவகாரங்களை வெளிப்படுத்தா விட்டாலும் சில நிகழ்ச்சிகளில் மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையில் இருவரும் ஒரே காரில் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படம் வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லரை வரவேற்று ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், 31-ந் தேதிக்காக என்னால் இப்போது காத்திருக்க முடியாது. நீங்கள் மூவரும் மேதைகள். விஜய் தேவரகொண்டா, கவுதம், அனிருத் நீங்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய படத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ‘இதை அனுபவியுங்கள் – கிங்டம்’ என பதிவிட்டுள்ளார்.