‘எனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க நான் விரும்பவில்லை’ – ஷாஹித் கபூர்|’I don’t want my children to act in films’

‘எனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க நான் விரும்பவில்லை’ – ஷாஹித் கபூர்|’I don’t want my children to act in films’


மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர். இவர் தற்போது தேவா படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாஹித் கபூர், தனது குழந்தைகள் சினிமாவில் நடிக்கதான் விரும்பவில்லை என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘நான் எப்போதும் சரியான விஷயங்களையே செய்ய விரும்புகிறேன். எனது குழந்தைகள் என்னைவிடவும் இயல்பிலேயே தைரியமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் இயல்பாகவே அந்த அளவுக்கு தன்னம்பிக்கை உடையவனல்ல.

அதனால், எனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க நான் விரும்பவில்லை. திரைத்துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருக்கின்றன. அது ஒரு கடினமான பாதை. அவர்கள் விரும்பினால் வரட்டும். ஆனால், இந்த கடினமாக வேலையை தவிர்த்து வேறெதாவது எளிமையான வேலையைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பேன்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *