”எனக்கு முதல் பட வாய்ப்பு அப்படிதான் கிடைத்தது” – நடிகை சிவாத்மிகா|”That’s how I got my first film opportunity”

சென்னை,
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தொரசானி’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிவாத்மிகா. பின்னர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இதனையடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுகளை அள்ளினார். இவர் தற்போது அர்ஜுன் தாஸுடன் ‘பாம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 12-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் முதல் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி எனபது குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,
”என்னுடைய முதல் படம் ‘தொரசானி’. அந்த படத்தில் 18 வயது பெண் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிக் கொண்டிருந்தனர். அவர் தெலுங்கை சரியாக உச்சரிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று கருதினர். என்னுடைய 18-வது பிறந்தநாள் விழாவுக்கு ‘தொரசானி’ படத்தின் தயாரிப்பாளர் வந்திருந்தார். அவர்தான் என்னை அந்தப் படத்தின் ஆடிசனில் கலந்துகொள்ளும்படி சொன்னார். அப்படி போனபோது, நான் சரியாக இருப்பேன் என்று என்னை தேர்வு செய்தனர். அந்தப் படத்திற்காக 90 பேர் வரை ஆடிசன் செய்ததாக பின்னாளில் பட தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினர்” என்றார்.