எனக்கு மிகவும் பிடித்தமான படம்…ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் – நடிகை மானசா |’My forever ever and ever fav film’

சென்னை,
”லக்கி பாஸ்கர்” படத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த மானசா சவுத்ரி தமிழில் அதர்வாவின் ”டிஎன்ஏ” படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், சித்தார்த்தின் ஜில்ஜங்ஜக் படத்தின் இடைவேளை காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மானசா, அது தனக்கு மிகவும் பிடித்த படம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’எனக்கு மிகவும் பிடித்த படம் இது. இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன், ஆனாலும் புதிதாக பார்ப்பதுபோல் உணர்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் டோபமைன் வெளிப்படுகிறது. சித்தார்த்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த இடைவெளி காட்சிதான் சிறப்பு’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






