”எனக்கு பிடித்த ரஜினி படம் அதுதான்” – ஸ்ருதிஹாசன்|Padayappa is my Favourite Rajini Sir film

சென்னை,
ரஜினியுடன் ”கூலி” படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், பிடித்த ரஜினி படம் எது? என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலளித்தார். அவர் கூறுகையில்,
”ரஜினி சாரின் எல்லா படங்களையும் நான் பார்த்தது இல்லை. என் அப்பாவின் எல்லா படங்களையும் கூட. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படையப்பா எனக்கு மிகவும் பிடித்த ரஜினி சார் படம்” என்றார்
மேலும் பேசிய அவர், ”ரஜினி சார் ரொம்ப பிரெண்ட்லி, உண்மையிலேயே ஒரு தங்கமான மனசுக்காரர். படப்பிடிப்பு தளத்துக்கு அவர் பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வருவார். அவருடன் பணிபுரிவது இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ”கூலி” படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.