எனக்கு பிடிக்காத நடிகை லைலா – ஷாம் பரபரப்பு கருத்து, Actress Laila I don’t like

கொஞ்சல் பேச்சு, துருதுரு நடிப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை, லைலா. தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்தார். விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் லைலா குறித்து நடிகர் ஷாம் பகிர்ந்த விஷயம் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், எனக்கு பிடிக்காத நடிகை லைலாதான் என்று சொல்லலாம். ‘உள்ளம் கேட்குதே’ படத்தில் ஒரு மாதிரி தொந்தரவு செய்யும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க என்னை ‘டார்ச்சர்’ செய்வார்.
இதனால் ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் ஜாலியான ஆள். நல்ல மனம் கொண்ட நடிகை” என்றார்.