எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை?…நடிகை சிவாத்மிகா சொன்னது யாரை தெரியுமா? |Which hero do you want to act with?…Do you know who actress Shivathmika said?

எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை?…நடிகை சிவாத்மிகா சொன்னது யாரை தெரியுமா? |Which hero do you want to act with?…Do you know who actress Shivathmika said?


சென்னை,

கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘டோராசானி’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிவாத்மிகா. பின்னர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இதனையடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுகளை அள்ளினார். இவர் தற்போது அர்ஜுன் தாஸுடன் ‘பாம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார் . அவர் கூறுகையில்,

”இந்தக் கேள்விக்கு நான் பதிலளித்தால், நீங்கள் வெளியிடும் அரை பக்க கட்டுரையில் இதற்கான பதிலை மட்டும்தான் போட வேண்டியதிருக்கும். நான் நடிக்க விரும்பும் ஹீரோக்களின் பட்டியல் அந்த அளவுக்கு மிக நீளமானது” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *