எத்தனை கோடி தெரியுமா ?| Do you know how many crores

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘கூலி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘கூலி’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்துள்ளதாக தயரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
வெளியான நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் கூலி படைத்தது. மேலும் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடியை கூலி படம் முந்தியுள்ளது.