எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்… உறுதி செய்த இசையமைப்பாளர்

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்… உறுதி செய்த இசையமைப்பாளர்


கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்குகிறார் எச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. தற்போது, ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். .இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *