எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் – கவிஞர் வைரமுத்து

எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் – கவிஞர் வைரமுத்து


சென்னை,

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கிய விருது நினைவுப்பரிசில் 1330 திருக்குறளில் இல்லாத ஒரு குறளை அச்சிட்டு வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழங்கிய விருதுகளை கவர்னர் மாளிகை திரும்பப் பெற்றுள்ளது.

இந்தநிலையில், கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பதிவில்,

‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதே நாளில் கவர்னர் மாளிகையில் ஒரு விழா நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்.மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் 944ஆம் திருக்குறள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்இல்லாத குறளை யாரோ எழுதியிருக்கிறார்கள் அப்படி ஒரு குறளே இல்லை. எண்ணும் தவறுயாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார் இது எங்ஙனம் நிகழ்ந்தது?ராஜ்பவனில்ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும் அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால்காவியடித்துக்கொள்ளுங்கள் எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *