ஊர்வசி நடிக்கும் "ஆஷா" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஊர்வசி நடிக்கும் "ஆஷா" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.

தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி, சபர் சனல் இயக்கத்தில் “ஆஷா” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ஆஷா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *