உலகக் கோப்பையை வென்றதும் ரஜினிகாந்த்… – ஹர்மன்பிரீத் பகிர்ந்த சுவாரசியம்/Rajinikanth’s World Cup win…

உலகக் கோப்பையை வென்றதும் ரஜினிகாந்த்… – ஹர்மன்பிரீத் பகிர்ந்த சுவாரசியம்/Rajinikanth’s World Cup win…


சென்னை,

அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது.

உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் நேற்று சென்னை வந்தார். அவருக்கு மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் ஒரு பள்ளி மற்று கல்லூரியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

அதில் விழா ஒன்றில் பேசிய் ஹர்மன்பிரீத் கவுர், “உலக சாம்பியன் ஆன பிறகு நான் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். சிறுவயதில் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்த நபர் போனில் அழைத்து பேசியது உற்சாகமாக இருந்தது. அப்போது அவர்‘இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருந்ததால் வர இயலவில்லை. ஆனால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியை பார்க்க வந்து இருந்தது. நமது அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர்’ என்று என்னிடம் சொன்னார்” என கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *