உருவாகுமா ''மாநாடு 2''? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை, ,
தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சிம்புவுக்கு ”மாநாடு” பிளாக்பஸ்டராக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரூ. 120 கோடி வசூல் செய்தது.
சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் தங்கள் நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றனர். இந்நிலையில், இந்த மெகா ஹிட் படத்தின் தொடர்ச்சி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிம்புவும் வெங்கட் பிரபுவும் ஏற்கனவே உள்ள பணிகளை முடித்த பிறகு ”மாநாடு 2” படத்தில் பணிபுரியத் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
சிம்பு தற்போது ”டிராகன்” இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் வெற்றிமாறனுடன் படங்களில் நடித்து வருகிறார். மறுபுறம், வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், ”மாநாடு 2” நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.