உதயநிதியுடன் செல்பி – மோசமான கமெண்டுகளுக்கு நடிகை பதிலடி

உதயநிதியுடன் செல்பி – மோசமான கமெண்டுகளுக்கு நடிகை பதிலடி


உதயநிதி பிறந்தநாளையொட்டி அவருடன் நடித்த ரெத்திகா ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்தப் பதிவின் கீழ் ஏராளமான கமண்ட்ஸ்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் மோசமான கமெண்ட்டுகளாகவே இருந்தது.

இந்த நிலையில் அந்த மோசமான கமெண்ட்டுகள் குறித்து ரெத்திகா ஸ்ரீனிவாஸ் பேசியுள்ளார். அந்த பதிவு தேவையற்ற கருத்துகளையும் கவனத்தையும் பெற்றது எனவும் இவ்வளவு சாதாரணமான பதிவிற்கும் கூட மக்கள் வெறுப்பைப் பரப்புவதற்கு கமெண்ட் செக்‌ஷனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என யோசித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்த ஒரு போட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ் ஷேர் கமெண்ட்ஸ்… உதயநிதியுடன் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்தேன். அப்போ எடுத்த செல்பி தான் இந்த போட்டோ. அதனால் தான் அவருடைய பர்த்டேக்கு விஷ் பன்னேன். கோட் படத்திலும் ஒரு சான்ஸ் வந்துச்சு. ஆனால் அது குட்டி ரோல் என மிஸ் செய்து விட்டேன். இப்ப தோணுது விஜய் சாரோடும் ஒரு போட்டோ எடுத்திருக்கலாமேன்னு.

ஒன்னு தெரிஞ்சுக்கோங்க இவங்க எல்லாம் என்னுடைய சக நடிகர்கள். அவங்களோட போட்டோ எடுத்தேன்னா நிச்சயமா அவங்க பர்த்டேக்கு அதை போஸ்ட் பண்ணுவேன். அவ்ளோ கமெண்ட்ஸ் பண்ணி இருக்கீங்க. அதுல அரசியல் பார்வையும் வேற. அது மகிழ்ச்சி தான். ஆனால் அதை என்னுடைய கமெண்டில் போட்டு எந்தப் பயனும் இல்லை. உங்களுடைய ஆதரவை வாக்கு செலுத்தும் போது யாருக்கு பிடிக்குதோ அவங்களுக்கு காமிங்க” என்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Rethika (@actressrethika)

உதயநிதி ஸ்டாலினுடன் நடிகை ரெத்திகா ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *