உடல் எடை குறித்து உருவக் கேலி; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்

தனது அழகு மற்றும் திறமையால் திரைத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 2011-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் உடல் ரீதியான மாற்றங்களால் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து உருவக் கேலிக்கு ஆளாகி வருகிறார்.
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உடல் எடை அதிகமானது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது பற்றி ஐஸ்வர்யாராய் “ஆராத்யா பிறந்த பிறகு கொஞ்சம் எடைகூடியதற்காக பல சந்தர்ப்பங்களில் என்னை உருவகேலி செய்கிறார்கள். ஆனால் நான் உடல் எடை கூடினால் உங்களுக்கு என்ன பிரச்சினை? மகள் பிறந்த பிறகு நான் எடை கூடினேனா? அல்லது உடலில் நீர் பிடித்ததா என்னும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். என்னை விட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா? என் எடையால் எனக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. வேண்டுமென்றால் இரவோடு இரவாக எடையை குறைத்துக் கொள்ள என்னால் முடியும். ஆனால் இப்பொழுது அந்த அவசியம் இல்லை. தற்பொழுது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னை பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும் என்ன பேசினாலும் கூட எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கடும் கோபமாக பதில் அளித்துள்ளார்.
இந்தி திரையுலகின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‘குரு’ மற்றும் `ராவணன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.