இவரை பார்த்தால் அப்படி தெரியாது..யோகி பாபுவை கலாய்த்த நடிகர் பிரம்மானந்தம்

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நடிக்காத தமிழ் படங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு செம பிசியாக உள்ள யோகி பாபு, தற்போது குர்ரம் பாப்பிரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு, தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை சந்தித்து உரையாடினார்.
அப்போது தன்னுடைய வீட்டிற்கு வருமாறு யோகி பாபுவுக்கு பிரம்மானந்தம் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று யோகி பாபு பிரம்மானந்தம் வீட்டிற்கு சென்றார். தன்னுடைய வீட்டிற்கு வந்த யோகி பாபுவை வரவேற்ற பிரம்மானந்தம் அவருக்கு விருந்தளித்து உபசரித்தார்.
மேலும் தான் வாங்கி குவித்துள்ள விருதுகளையும் யோகி பாபுவிற்கு காட்டினார். அப்போது பேசிய பிரம்மானந்தம், ” இவரைப் பார்த்தால் (யோகி பாபு) நகைச்சுவை நடிகர் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால் தன்னுடைய நடிப்பில் நகைச்சுவையை கொண்டு வருவதில் மிகவும் வல்லவர்” என்று கூறினார்.